ADDED : செப் 07, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சந்துரு, மணிகண்டன், கடந்த, 3ம் தேதி நான்காவது பிளாட்பாரத்தில் ரோந்தில் ஈடுபட்ட போது, சோதனைக்கு பயந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர், பையை பிளாட்பாரத்திலேயே விட்டு சென்றார்.
கேட்பாரற்று கிடந்த பையை, இருவரும் கைப்பற்றி சோதனை செய்ததில், 9 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது.
அவர்கள் இதை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்காமல் பதுக்கினர்.
ரயில்வே எஸ்.பி., ஈஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இருவரிடமும் விசாரித்ததில், கஞ்சா பதுக்கியது உறுதியானது.
இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.