ADDED : மே 28, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தலைவன்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சதீஷ்குமார் 23. ராணுவ வீரர். ஒரு வார விடுமுறையில் வந்திருந்தார். நாகர்கோவிலில் உள்ள நண்பரை பார்க்க டூவீலரில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவில் சென்றார்.
அவருடன் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே பழனி கோட்டையைச் சேர்ந்த கபிலேஸ்வரன் 23 என்பவரும் உடன் சென்றார்.
நான்கு வழிச்சாலையில் பொன்னாக்குடி அருகே வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்காக பாலம் கட்டப்படுகிறது. மிக குறுகிய அளவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாயினர். முன்னீர்பள்ளம் போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.