வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி: பா.ஜ., காங்., மோதலால் பரபரப்பு
வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி: பா.ஜ., காங்., மோதலால் பரபரப்பு
ADDED : ஆக 31, 2024 10:59 PM

நாகர்கோவில்: வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சியில் யார் பெரியவர் என்பதில் காங்., - பா.ஜ.,இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூர் நாகர்கோவில் இடையே நேற்று தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக 11:30 மணிக்கு நாகர்கோவில் வந்தது. ரயிலை வரவேற்க நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
முதலில் பா.ஜ., எம்.எல்.ஏ., எம். ஆர். காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர்வக்கீல் மகேஷ் ஆகியோர் வந்து அமர்ந்திருந்தனர். சுமார் 10:00 மணியளவில் நாகர்கோவில் காங் எம். பி. விஜய் வசந்த் வந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் அவரை தோளில் தூக்கி 'ஜே' .கோஷமிட்டனர். அப்போது சிலர் காங்கிரஸ் கொடியை தூக்கிப் பிடித்ததால் பா.ஜ.,வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இருதரப்பிலும் பிடிக்கப்பட்டிரருந்த கொடியை வாங்கி போலீசார் அப்புறப்படுத்தினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து நிகழ்வுகள் தொடங்கியது. எனினும் அடிக்கடி மோடி, ராகுல் என்ற கோஷத்தால் விழா நிகழ்வுகள் தாறுமாறானது