ADDED : மே 16, 2024 01:34 AM
சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, சென்னையில் நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வில் பொதுச் செயலர் பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட பலரை, வேலுமணி சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி பழனிசாமி தன் பிறந்த நாளை, சேலத்தில் கொண்டாடினார்; வேலுமணி செல்லவில்லை. இது, பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று சென்னையில் பழனிசாமியை, அவரது வீட்டில் வேலுமணி சந்தித்தார். பூங்கொத்து கொடுத்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.