வீட்டில் வழுக்கி விழுந்த வைகோ; தோளில் எலும்பு முறிவு
வீட்டில் வழுக்கி விழுந்த வைகோ; தோளில் எலும்பு முறிவு
UPDATED : மே 26, 2024 02:36 PM
ADDED : மே 26, 2024 02:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் உள்ள வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து வைகோவின் மகன் துரை, எக்ஸ் சமூகவலைதளத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எனது தந்தை , கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று (மே-25) திருநெல்வேலி சென்று இருந்தார். இரவு, வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இதனால் அவர் சென்னைக்கு செல்ல உள்ளார். தந்தை விரைவில் நலம் பெறுவார். அச்சம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.