தி.மு.க., அரசை மாற்றுவோம் மகளிருக்கு விஜய் அழைப்பு
தி.மு.க., அரசை மாற்றுவோம் மகளிருக்கு விஜய் அழைப்பு
ADDED : மார் 09, 2025 01:17 AM
சென்னை: ''மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய தி.மு.க.,வை, வரும் 2026ல் நாம் எல்லாரும் சேர்ந்து மாற்றுவோம்,'' என, த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
என் அம்மா, அக்கா, தங்கச்சி, தோழி என, அனைவருக்கும் மகளிர் தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும், என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள்; சந்தோஷம்தானே.
பாதுகாப்பாக இருந்தா தானே, சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதப்ப, எந்த சந்தோஷமும் இருக்காது தானே. அப்படி நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது; என்ன செய்ய?
நீங்க, நாம எல்லாரும் சேர்ந்து தான், இந்த தி.மு.க., அரசை தேர்ந்தெடுத்தோம். அவங்க இப்படி நம்மளை ஏமாத்துவாங்கன்னு இப்பத்தானே தெரியுது. எல்லாமும் மாறக்கூடியது தானே; மாற்றத்திற்கு உரியது தானே. கவலைப்படாதீங்க!
வரும் 2026ல் நீங்க எல்லாரும் சேர்ந்து, இல்ல நாம் எல்லாரும் சேர்ந்து, மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு, மகளிர் தினத்தில் நாம் எல்லாரும் சேர்ந்து உறுதி ஏற்போம். ஒன்று மட்டும் சொல்கிறேன். எல்லா சூழ்நிலையிலும், உங்கள் மகனா, அண்ணனா, தம்பியா, தோழனா, உங்களோடு நான் நிற்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.