நாளை உலக பட்டினி தினம்: அன்னதானம் வழங்க விஜய் உத்தரவு
நாளை உலக பட்டினி தினம்: அன்னதானம் வழங்க விஜய் உத்தரவு
UPDATED : மே 27, 2024 07:24 AM
ADDED : மே 27, 2024 04:40 AM

சென்னை : நடிகர் விஜயின் தமிழகவெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பட்டினி இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக பட்டினி தினத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் உரிய தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி, அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்குவதாக, பிப்ரவரி மாதம் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் இழுபறியாக உள்ளன.
இந்நிலையில், ஏழைகள் தொழில் துவங்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகளை, உலக பட்டினி தினத்தில் செய்திருந்தால் சிறப்பாக இருக்கும்.
ஒரு நாளில் ஒருவேளை அன்னதானம் வழங்கினால், பட்டினி தீர்ந்து விடாது. இதை விஜய் புரிந்து செயல்பட வேண்டும் என, பலரும் கிண்டல் அடித்துள்ளனர்.

