ஜூலை 10ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஜூலை 10ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
UPDATED : ஜூன் 10, 2024 05:44 PM
ADDED : ஜூன் 10, 2024 12:07 PM

சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி உயிரிழந்தார். இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் - ஜூன் 14ம் தேதி துவங்கும். வேட்பு மனுவை தாக்கல் செய்ய, ஜூன் 21ம் தேதி கடைசி நாள்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை - ஜூன் 24ம் தேதி. வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள்- ஜூன் 26ம் தேதி.
ஓட்டு எண்ணிக்கை எப்போது?
ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல். இடைத்தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.