குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம பெண்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம பெண்கள் சாலை மறியல்
ADDED : செப் 05, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை ரூ.126 கோடி மதிப்பில் நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில், மூரார்பாளையம் அடுத்த பரமநத்தம் கிராம குடிநீர் குழாய் உடைந்தது. அதனை மூன்று மாதமாகியும் சீரமைக்காததால், கிராம மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பரமநத்தம் கிராம பெண்கள் 50 பேர் நேற்று காலை 10 மணிக்கு, காலிக்குடங்களுடன் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபுட்டனர்.
அவர்களிடம், சங்கராபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது..