sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வைகை அணை இன்று பாசனத்திற்காக திறப்பு

/

வைகை அணை இன்று பாசனத்திற்காக திறப்பு

வைகை அணை இன்று பாசனத்திற்காக திறப்பு

வைகை அணை இன்று பாசனத்திற்காக திறப்பு


ADDED : மே 09, 2024 11:43 PM

Google News

ADDED : மே 09, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் 15 நாட்கள் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வைகை பூர்வீக பாசனப்பகுதி 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு இன்று முதல் மே 14 வரை 5 நாட்களுக்கு 915 மில்லியன் கனஅடியும், பகுதி 2ல் உள்ள சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு மே 16 முதல் 19 வரை 4 நாட்கள் 376 மில்லியன் கன அடியும், பாசனப்பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களுக்கு மே 21 முதல் 26 வரை 6 நாட்களுக்கு 209 மில்லியன் கன அடியும், தண்ணீர் திறப்பு விதிகளின் படி 2: 3:7 என்ற விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை நீர்மட்டம் 56.59 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேறுகிறது. நீர்வரத்து வினாடிக்கு 50 கனஅடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us