கோத்தகிரியில் குளவி கொட்டியது; சுற்றுலாப் பயணிகள் இருவர் பலி
கோத்தகிரியில் குளவி கொட்டியது; சுற்றுலாப் பயணிகள் இருவர் பலி
ADDED : மே 04, 2024 06:39 PM

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஹாடத்தொரைக்கு, சுற்றுலா சென்ற கோவையை சேர்ந்த ராஜசேகர், 56, கார்த்திகேயன் ஆகியோர் குளவி கொட்டியதில் உயிரிழப்பு. மேலும் 7 பேர் காயத்துடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி.
கோவை சித்தாபுதூர் பகுதியில் இருந்து, மூன்று குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நீலகிரிக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளனர். இயற்கை காட்சிகளை கண்டுக்களித்த அவர்கள் கோத்தகிரி தாந்தநாடு பகுதியில் இருந்த நண்பர் வீட்டில் தூங்கியுள்ளனர். மாலை கோத்தகிரி அருகே உள்ள ஹாடாதொரை பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டுகளித்துள்ளனர். அப்போது, மழை பெய்த நிலையில், குளவி கூடு கலைந்து, குளவிகள் வெளியேறி அவர்களை கடத்துள்ளது.
படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், ராஜசேகர், 56, மற்றும் கார்த்திகேயன் 56 இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த ரவி கண்ணன் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோத்தகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.