sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி: சொல்கிறார் ராமதாஸ்

/

பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி: சொல்கிறார் ராமதாஸ்

பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி: சொல்கிறார் ராமதாஸ்

பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி: சொல்கிறார் ராமதாஸ்

12


UPDATED : ஜூலை 13, 2024 05:15 PM

ADDED : ஜூலை 13, 2024 03:49 PM

Google News

UPDATED : ஜூலை 13, 2024 05:15 PM ADDED : ஜூலை 13, 2024 03:49 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



அவரது அறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,261 ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை துவங்கி விட்டது.

ரூ.3,ஆயிரம் பணம்

ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர். நிறைவாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை திமுக வழங்கியது.

டோக்கனுக்கு கிடைத்த வெற்றி

அந்த வகையில் திமுகவின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்கு கிடைத்த வெற்றி, டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, வேட்டி சேலைகளுக்கு கிடைத்த வெற்றி, தங்க மூக்குத்திகளுக்கு கிடைத்த வெற்றி, மளிகை சாமான்களுக்கு கிடைத்த வெற்றி, வெள்ளமாக பாய விடப்பட்ட மதுவுக்கு கிடைத்த வெற்றி, திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி.

சமூக அநீதி

மறுபுறத்தில் பா.ம.க., மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. பாமகவினரும், கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தனர். பா.ம.க.,வுக்கே உண்மையான வெற்றி. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் பா.ம.க, மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

தி.மு.க., மீது அன்புமணி குற்றச்சாட்டு

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது: விக்கிரவாண்டியில் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. இடைத்தேர்தலில் பணம், பொருள் கொடுத்ததை தேர்தல் கமிஷன் தடுத்து நிறுத்தவில்லை. பணம், அதிகாரத்தை வைத்து தி.மு.க., இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தி.மு.க., செலவு செய்துள்ளது. தேர்தல் கமிஷன் இருக்கிறதா?.
பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் தந்து இடைத்தேர்தலை ஜனநாயக கேலிக்கூத்தாக்கி விட்டது திமுக. 33 அமைச்சர்கள், 30 எம்.பி.க்கள் உள்ளிட்டோர் விக்கிரவாண்டியில் முகாமிட்டு பணம் தந்தனர். பணம், அதிகாரத்தை வைத்து திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இடைத்தேர்தலுக்காக திமுக செலவிட்டுள்ளது. பணம் கொடுத்து வென்றதை முதல்வர் ஸ்டாலின் பெருமை கொள்ளக்கூடாது. இவ்வாறு அன்புமணி கூறினார்.








      Dinamalar
      Follow us