ADDED : ஜன 21, 2025 07:27 PM
ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., ஓட்டுகள் பிற கட்சிகளுக்கு கிடைக்காது. நாம் தமிழர் கட்சிக்கு அ.தி.மு.க., ஓட்டுகள் செல்லும் என அக்கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அது நடக்காது.
மக்கள் தான் எல்லோருக்கும் எஜமானர்கள். அ.தி.மு.க., ஓட்டுகளை யாருக்கு செலுத்த வேண்டும் என அவர்கள் முடிவெடுப்பர்.
கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது; தி.மு.க., பாடுபட்டது. ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல, மக்களை பட்டியில் அடைத்து வைத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். இதையெல்லாம் பார்த்து தான் இம்முறை நாங்கள் களத்தில் நிற்கவில்லை.
அ.தி.மு.க., தலைமை என்ன சொல்கிறதோ; விரும்புகிறதோ, அதைத்தான் கட்சியின் கடைக்கோடி தொண்டன் வரை நிறைவேற்றுவான். அதை மீறி, அவன் ஒரு இம்மி
அளவுக்குக் கூட மாற்றி செய்ய மாட்டான்.
செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,