கர்நாடக துணை முதல்வர் வந்தால் கருப்பு கொடி காட்டுவோம்: அண்ணாமலை
கர்நாடக துணை முதல்வர் வந்தால் கருப்பு கொடி காட்டுவோம்: அண்ணாமலை
ADDED : மார் 14, 2025 10:41 PM
சென்னை:''கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், தமிழகம் வந்தால், பா.ஜ., சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பட்ஜெட் வெற்று பேப்பர் போல் உள்ளது. ஊதியம், ஓய்வூதியம் தரக்கூட முடியாத அளவுக்கு, தமிழகம் தத்தளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி மதுபான ஊழலுக்கு வழிவகுத்தார். தமிழக டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது. ஏற்கனவே தன் மீதான வழக்கில் ஜாமின் பெற்றிருக்கும் செந்தில்பாலாஜி, ஜாமினில் வெளி வந்து வழக்கில் சாட்சிகளாக இருப்போரை மிரட்டுவதாக கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக திகழும் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும். அதற்கு, உரிய சட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை எடுக்க வேண்டும்.
'காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவோம்' என, சொல்லும், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் எப்படி தமிழகத்துக்கு வர முடியும். அவர் தொகுதி மறுவரையறை தொடர்பான, அனைத்து மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க, தமிழகம் வந்தால், தமிழக பா.ஜ., பா.ஜ., சார்பில், கருப்பு கொடி காட்டப்படும். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட, மத்திய அரசு நிச்சயம் அனுமதி தராது.
இவ்வாறு அவர் கூறினார்.