sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 'வெஸ்ட் நைல்' வைரஸ் பாதிப்பு? பொது சுகாதார துறை எச்சரிக்கை

/

தமிழகத்தில் 'வெஸ்ட் நைல்' வைரஸ் பாதிப்பு? பொது சுகாதார துறை எச்சரிக்கை

தமிழகத்தில் 'வெஸ்ட் நைல்' வைரஸ் பாதிப்பு? பொது சுகாதார துறை எச்சரிக்கை

தமிழகத்தில் 'வெஸ்ட் நைல்' வைரஸ் பாதிப்பு? பொது சுகாதார துறை எச்சரிக்கை


UPDATED : மே 12, 2024 04:13 AM

ADDED : மே 11, 2024 09:17 PM

Google News

UPDATED : மே 12, 2024 04:13 AM ADDED : மே 11, 2024 09:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கேரளாவில், 'க்யூலக்ஸ்' வகை கொசுக்களால் பரவக்கூடிய,'வெஸ்ட் நைல்' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில், 'வெஸ்ட் நைல்' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், தமிழக மக்கள் எச்சரிக்கையுடனும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனடி சிகிச்சை பெற வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அறிவிப்பு:

வெஸ்ட் நைல் வைரஸ் என்பது, 'க்யூலக்ஸ்' வகை கொசுக்களால் பரவும் நோய். இந்த வைரஸ் பறவைகளிடமிருந்து, கொசுக்களுக்கும், பின் கொசுக்கள் வாயிலாக மனிதர்களுக்கும் பரவுகிறது. ஒரு மனிதரிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு நேரடியாக பரவுவதில்லை. இந்த வைரஸ் உகாண்டா நாட்டில், வெஸ்ட் நைல் மாவட்டத்தில், 1937ல் கண்டுபிடிக்கப்பட்டது.

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களில், 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை. காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி போன்ற அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும்.

சிலருக்கு கடுமையான அறிகுறிகளான அதிக காய்ச்சல், கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா, பலவீனம், உணர்வின்மை, வலிப்பு, தசை பலவீனம், பக்கவாதம் மற்றும் மூளைக்காய்ச்சல் ஏற்படும்.

இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கும். ஆனால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் எளிதாக பாதிக்கப்படுவர். இந்நோய், ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.

சமீபத்தில் கேரளா மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெஸ்ட் நைல் வைரஸ் நோய் அறிகுறிகள் இருப்பின், மூளை காய்ச்சல் போன்ற பாதிப்பு உடையவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்நோயை, 'எலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர்.,' பரிசோதனைகளில் கண்டறியலாம். நோய் தொற்று சந்தேகப்படும் நபர்களிடமிருந்து பரிசோதனைகள் மாதிரிகள் பெறப்பட்டு, புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் பரிசோதிக்க வேண்டும்.

இந்த காய்ச்சல் பரவினால், பொதுமக்கள் பீதியடைய வேண்டியதில்லை. காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்க்க, போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us