முதல்வர் அளிக்கும் பரிசு பெட்டகத்தில் இருப்பது என்ன?
முதல்வர் அளிக்கும் பரிசு பெட்டகத்தில் இருப்பது என்ன?
ADDED : செப் 01, 2024 01:21 AM

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தன்னை சந்திக்கும் விருந்தினர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு, 'தடம்' பரிசு பெட்டகத்தை பரிசளித்து வருகிறார். அதில், தமிழகத்தின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
திருநெல்வேலியில் தயாராகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை, விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா குதிரை சிற்பங்கள், நீலகிரி தோடா எம்ப்ராய்டரி சால்வை, பவானி ஜமுக்காளம், புலிகாட்டில் செய்யப்பட்ட பனை ஓலை பெட்டி, கும்பகோணம் பித்தளை விளக்கு என, கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில், பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சம காலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறை சாற்றுவதற்காகவும் 'தடம்' திட்டம் உருவாக்கப் பட்டது.
அத்திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தான் சந்திக்கும் விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு, தடம் பெட்டகத்தை பரிசாக அளித்து வருகிறார்.