சாதாரண மக்களின் நிலை என்ன?: தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி கேள்வி
சாதாரண மக்களின் நிலை என்ன?: தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி கேள்வி
ADDED : ஏப் 03, 2024 06:00 PM

தூத்துக்குடி: பா.ஜ.,வில் சேர்ந்து விட்டால் வழக்கும் கிடையாது விசாரணையும் கிடையாது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? என தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசியதாவது: எதிர்க்கட்சியில் இருப்போர் அனைவரும் பா.ஜ.,வில் இணைந்தால் வழக்கு ரத்து செய்யப்படும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அதிமுக, பாஜ., துடித்துக் கொண்டு இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மூடிக் காட்டியவர் முதல்வர் ஸ்டாலின்.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தேர்தல். பா.ஜ.,வில் சேர்ந்து விட்டால் வழக்கும் கிடையாது விசாரணையும் கிடையாது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?. பா.ஜ.,வில் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேரில் 3 பேர் மீதான ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இவ்வாறு கனிமொழி பேசினார்.

