'பீஹாரில் சாத்தியமான மது விலக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது?'
'பீஹாரில் சாத்தியமான மது விலக்கு தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது?'
ADDED : செப் 18, 2024 05:04 AM

கோவை : பா.ஜ., மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா அளித்த பேட்டி: மத்திய அரசின் திட்டங்களுக்கு, மாநில அரசு போதுமான ஒத்துழைப்புத் தருவதில்லை. விஸ்வகர்மா திட்டத்தை, மாநில அரசு 'நோட்டிபை' செய்யவே இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, மக்களை ஏமாற்றும் செயல். 500 மதுக்கடைகளை மூடியதாகக் கூறும் அரசு, எப்.எல்., - 2 உரிமம் வழங்கி, 1,000 மது கிளப்களை துவக்கியுள்ளது. பீஹாரில் மது விலக்கு சாத்தியம் எனில், தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது?
தி.மு.க.,வில், 'போதை அணி' எனத் தனியாக உருவாக்கும் அளவுக்கு, போதை மருந்து விற்பனையோடு தொடர்புடையவர்கள் கட்சியில் உள்ளனர். அ.தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணி என்பதை, பா.ஜ., தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். அவர்கள் முடிவு செய்து அறிவித்தால், அதை செயல்படுத்தும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.
தி.மு.க., ஆட்சியில் இருக்கும்போது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், காவல் துறை கண்மூடி அமைதி காக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

