இட ஒதுக்கீடு பற்றி இ.பி.எஸ்., பேசாதது ஏன்?: அன்புமணி
இட ஒதுக்கீடு பற்றி இ.பி.எஸ்., பேசாதது ஏன்?: அன்புமணி
UPDATED : ஏப் 06, 2024 07:06 AM
ADDED : ஏப் 06, 2024 06:36 AM

சென்னை: இடஒதுக்கீடு பற்றி இ.பி.எஸ்., பேசாதது ஏன், என பா.ம.க., அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறியதாவது: ‛கருணாநிதிக்கு சமூக நீதியைப் பற்றி தெரியும். அவர் இருந்திருந்தால் இன்று, 10.5 சதவீத இடஒதுக்கீடு வந்திருக்கும். ஸ்டாலினை சுற்றி நாலு அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் வியாபாரிகளாக உள்ளனர். அவர்கள் சொல்வதைத் தான் ஸ்டாலின் கேட்கிறார்.
அவர்களுக்கு சமூகநீதியைப் பற்றி என்ன தெரியும்? 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என்றதும், தேர்தல் தேதி அறிவிக்கின்ற சில மணிநேரங்களில் அதாவது 12 மணியளவில் ஜி.கே.மணியிடம் இ.பி.எஸ்., ஒரு பட்டியல் கொடுத்தார்.
கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாவிட்டால் சட்டம் கொண்டு வர மாட்டோம் என்றார். அதற்கு மருத்துவர் ராமதாஸ், 'வெற்று பேப்பரில் கையெழுத்து போடுகிறேன். எங்களுக்கு சீட் வேண்டாம்.
இடஒதுக்கீடு போதும்' என்றார். உள் ஒதுக்கீட்டை ஐகோர்ட் ரத்து செய்த பிறகு, இதுவரைக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என இ.பி.எஸ்., பேசவில்லை.' இவ்வாறு அன்புமணி பேசினார்.

