அரசியலுக்கு முழுக்கு: மோடிக்கு சித்தராமையா சவால்!
அரசியலுக்கு முழுக்கு: மோடிக்கு சித்தராமையா சவால்!
ADDED : நவ 11, 2024 01:18 PM

பெங்களூரு: 'கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் ரூ.700 கோடி வசூல் செய்ததாக கூறிய குற்றச்சாட்டை, பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா சவால் விடுத்தார்.
மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசும் போது, 'மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் செலவுக்காக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் ரூ.700 கோடி வசூலித்து செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து, சித்தராமையா கூறியதாவது: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் ரூ.700 கோடி வசூல் செய்ததாக கூறிய குற்றச்சாட்டை பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்.
நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவீர்களா? கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததில் இருந்து அவர் மீண்டு வரவில்லை. எங்கு சென்றாலும் கர்நாடகா மாநிலத்தை பிரதமர் மோடி தவறாக பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்வர் பதிலடி
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், ' ரூ.700 கோடி வசூலித்து செய்துள்ளதாக, குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் எந்த தண்டனையும் சந்திப்பேன்' என்றார்.