'நோ பார்க்கிங்' ஏரியாவில் அரசு பஸ்களை நிறுத்துவீர்களா?: அபராதம் விதித்து போலீசார் அதிரடி
'நோ பார்க்கிங்' ஏரியாவில் அரசு பஸ்களை நிறுத்துவீர்களா?: அபராதம் விதித்து போலீசார் அதிரடி
UPDATED : மே 23, 2024 05:47 PM
ADDED : மே 23, 2024 05:40 PM

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகே ' நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 22 அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்து, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருநெல்வேலியில், பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த போலீஸ்காரர், அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்ததால், கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் சீருடையில் கோர்ட் உள்ளிட்ட நீண்ட துாரம் செல்லும் போது, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் வாரன்ட் கடிதத்துடன் செல்ல வேண்டும்' என்பதும் உத்தரவாக உள்ளது. எனவே, நேற்றைய சம்பவம், போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே மோதல், நெருடலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை- புதுச்சேரி பஸ் தாம்பரத்தில் நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போலீசாருக்கும், அரசு பஸ் கண்டர்களுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்கள் குறித்து சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.

