ADDED : மே 28, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே எஸ்.எஸ்.கோட்டை ரமேஷ் 30. இவர் குடும்பத்துடன் பூவந்தி லட்சுமிபுரத்தில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று காலை டிராக்டரில் உழவு பணிக்கு அவர் சென்றார். அவருடன் டிராக்டரில் மனைவி சத்யா 24, மகள் சாஷிகா 2, ஆகியோரும் சென்றனர். லட்சுமிபுரம் அருகே டிராக்டர் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் டிராக்டருக்குள் சிக்கி சத்யா இறந்தார். ரமேஷ், சாஷிகா டிராக்டரில் இருந்து குதித்து தப்பித்தனர்.
இதுகுறித்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.