துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?: துரைமுருகன் சொன்ன "நச்" பதில்
துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?: துரைமுருகன் சொன்ன "நச்" பதில்
ADDED : ஜூலை 21, 2024 04:15 PM

வேலூர்: துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என நிருபர்கள் கேள்விக்கு, 'துணை முதல்வர் பதவி கொடுத்தா யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?' என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
வேலூரில் நிருபர்கள் சந்திப்பில் துரைமுருகன் கூறியதாவது: நாடகம் என்றால் பழனிசாமிக்கு என்ன என்று தெரியுமா?. அதிமுகவினர் இப்போது நடத்துவது எல்லாம் நாடகம். துணை முதல்வர் பதவி கொடுத்தா யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?. இது எல்லோரும் சேர்ந்து கூட்டு முயற்சியால் எடுக்க வேண்டிய முடிவு. தமிழகத்தில் நடப்பது கூட்டு மந்திரி சபை. தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது எல்லாம் பிரச்னை அல்ல
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில், தண்ணீர் 'லீக்' ஆகுவது தெரிய வந்துள்ளது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' எல்லா அணைகளிலும் சிறிதளவு தண்ணீர் வெளியே போகதான் செய்யும். இது எல்லாம் ஒரு பிரச்னை கிடையாது'' என துரைமுருகன் பதில் அளித்தார்.