ADDED : செப் 04, 2024 09:20 PM
புதுடில்லி:நகரின் பல பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை வெள்ளம் தேங்காதபடி இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
வெள்ளம் தேங்கும் பகுதிகளை மாநகராட்சி அடையாளம் கண்டு, அதற்கு தீர்வு குறித்து திட்டமிட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பல்வேறு பணிகளை மாநகராட்சி தொடங்கியது.
இந்த பணிகளை துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஆய்வு செய்தார். அவருக்கு மழை வெள்ளம் தேங்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கினர்.
இதற்கிடையில் நேற்று டில்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.