சென்னையில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; போலீசார் அதிரடி
சென்னையில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்; போலீசார் அதிரடி
ADDED : பிப் 22, 2025 11:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 960 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், வியாசர்பாடி அருகே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, போலீசார் நடத்திய சோதனையில், வீட்டில் 960 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், முகமது ரசூல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்த சம்பத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? எதற்காக கடத்தப்பட்டது என பின்னணி குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.