தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/10 மருந்தியல் கல்லுாரிகள் விரைவில் தொடக்கம்

10 மருந்தியல் கல்லுாரிகள் விரைவில் தொடக்கம்

10 மருந்தியல் கல்லுாரிகள் விரைவில் தொடக்கம்


UPDATED : அக் 14, 2026 09:08 PM

ADDED : அக் 14, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:08 PM ADDED : அக் 14, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘‘டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரைகளை வழங்கக் கூடாது,’’ என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், உலக மருந்தாளுனர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில், அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:

தமிழகத்தில், 50 ஆயிரம் மருந்தகங்கள் உள்ளன. இரவில் காய்ச்சலுடன் சென்றாலும், அவர்களுக்கு முதல் சிகிச்சை அளிப்பவராக மருந்தாளுனர்கள் தான் உள்ளனர். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோயாளிகள், தினமும் எட்டு மாத்திரைகள் வரை உட்கொள்ளக்கூடும்.

எனவே, ஒவ்வொரு நோயாளியும் வீடு திரும்பும் முன், அவரது மருந்துகளை சரிபார்த்து, முறையாக மருந்து உட்கொள்ள வழிகாட்ட வேண்டும். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல், போதை தரும் மாத்திரையை விற்கக் கூடாது. இதனால், விற்பனையை இழக்கலாம்; ஆனால், இளைஞரின் உயிரை காக்கக்கூடும்.

அதேபோல், மருந்துச் சீட்டு இல்லாமல், ‘ஆன்டிபயாடிக்’ மாத்திரை விற்பனையும் கூடாது. ஒவ்வொரு மருந்தும் பாதுகாப்பான முறையில், நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் இருத்தல் அவசியம்.

தற்போது, சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவ கல்லுாரிகளில் மட்டுமே, மருந்தியல் பயிலும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர சுயநிதி கல்லுாரிகள் தான் உள்ளன. ஏழை, எளிய மக்கள் படிக்க முடியாத சூழல் இருந்தது. இதற்காக, 10 மருந்தியல் கல்லுாரிகள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us