நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் பாலக்கரையில் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தகோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். முருகன், சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் அசோகன் கண்டன உரையாற்றினார். சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.