தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : நவ 10, 2024 12:55 PM

சென்னை: சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க., மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை, பின்வருமாறு:
* தமிழகம் முழுவதும் இருந்து நமது கழகத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து விஜயகாந்த் நினைவு நாளை வருடம் தோறும் அஞ்சலி செலுத்துவோம்.
* பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
* பாலியல் வன்கொடுமையையும் தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
* மாநகராட்சி சொத்து வரியை மீண்டும் அதிகமாக உயர்த்தி, மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
* கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறுகின்ற வகையில் தீர்வு காண வேண்டும்.
* மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் உயர்வும், ஆசியர்களுக்கு பழைய ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுடைய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.
* தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து தீர்மானம்.
* மின்சாரக்கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம்.
* தமிழக மக்களுக்காக கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.