பஞ்சவடியில் நாளை மறுநாள் 1,000 லிட்டர் பால் அபிேஷகம்
பஞ்சவடியில் நாளை மறுநாள் 1,000 லிட்டர் பால் அபிேஷகம்
ADDED : ஜன 20, 2024 06:24 AM
புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில், நாளை மறுநாள் 22ம் தேதி பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்திக்கு 1,000 லிட்டர் பால் அபிேஷகம் நடக்கிறது.
அயோத்தியில் ராமர் கோவில் திருப்பணிகள் தொடங்கிய நாள் முதல் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு சங்கல்பங்களுடன் கூடிய சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்து வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும், 22ம் தேதி காலை 9:00 மணிக்கு, பஞ்சவடியில் உள்ள சீதா, லட்சுமணன், பரத, சத்ருக்குன, சுக்ரீவ, அங்கத, ஜாம்பவான், விபீஷண, அனுமன் சமேத பட்டாபிேஷக ராமச்சந்திரமூர்த்திக்கு, 1,000 லிட்டர் பால் அபிேஷகம், வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. பால் அபிேஷகத்தில் அனைத்து பக்தர்களும் கலந்து கொள்ள பஞ்சவடி ஜெயமாருதி சேவா டிரஸ்ட் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.