ADDED : நவ 26, 2024 12:11 AM

சென்னை: 'தீப திருவிழாவையொட்டி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணா மலைக்கு, 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா டிச., 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், கடலுார், சிதம்பரம், கும்பகோணம், வேலுார், விழுப்புரம், அரியலுார், பெரம்பூர், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, விருத்தாசலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு, 1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து மட்டும், 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளோம். சிறப்பு பஸ்களை இயக்கம், தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட ஏற்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.