ADDED : மார் 30, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சென்னை வானிலை மையத்தின் அறிக்கை:
நேற்று மதுரை, சேலம், கரூர் மாவட்டம் பரமத்தி, திருச்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, வேலுார், ஈரோடு, தருமபுரி, சென்னை, கோவை நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 39.8, ஈரோட்டில் 39.6, சென்னையில் 39.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.