தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு ரிசல்ட் இன்று வெளியீடு


ADDED : மே 16, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2025 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 16) வெளியாகின்றன.

கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

இன்று காலை 9:00 மணிக்கு பத்தாம் வகுப்பு, மதியம் 2:00 மணிக்கு பிளஸ் 1 முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us