sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

11 நாள் டீ, காபிக்கு ரூ.27 லட்சம் செலவா?: கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி

/

11 நாள் டீ, காபிக்கு ரூ.27 லட்சம் செலவா?: கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி

11 நாள் டீ, காபிக்கு ரூ.27 லட்சம் செலவா?: கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி

11 நாள் டீ, காபிக்கு ரூ.27 லட்சம் செலவா?: கோவை மாநகராட்சி காட்டிய கணக்கால் அதிர்ச்சி

22


ADDED : ஜூலை 26, 2024 03:14 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:14 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயை அணைப்பதற்கான கணக்குகள் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதில் மொத்த செலவு ரூ.76,70,318 எனவும், டீ காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவு என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் உரம் தயாரிக்கும் இடம் அருகே கடந்த ஏப்.,6 முதல் ஏப்.,17 வரை தீப்பற்றியது. அப்போது, விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது. அதன்படி, காட்டப்பட்டுள்ள செலவுக்கணக்கில் மொத்த செலவு ரூ.76,70,318 எனவும், டீ காபி, உணவு உள்ளிட்டவை வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவு என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெறும், டீ, காபி, உணவுகளுக்கு ரூ.27 லட்சம் செலவு கணக்கு காட்டப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டப்பட்ட செலவின விபரம்


உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் - ரூ. 27,51,678

டீசல், பெட்ரோல், கீரிஸ் ஆயில் - ரூ. 18,29,731

காலணிகள் - ரூ. 52,348

முகக்கவசம் - ரூ. 1,82,900

பொக்லைன் மற்றும் லாரி வாடகை - ரூ. 23,48,661

தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி மற்றும் தனியார் வாகனம்) - ரூ. 5,05,000

மொத்த செலவு - ரூ. 76,70,318






      Dinamalar
      Follow us