ADDED : ஆக 27, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., மகேஸ்வரன், மதுரை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கும், சிவகங்கை மாவட்ட டி.எஸ்.பி., இருதயம், சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை திலகர் திடல் உதவி கமிஷனர் சேகர், மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கும், சி.பி.சி.ஐ.டி., சைபர் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பூரணி, சி.பி.சி.ஐ.டி., ஆராய்ச்சி மையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் உட்பட, 11 டி.எஸ்.பி.,க்களை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.