ADDED : ஜூன் 22, 2024 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில் கள்ளச்சாராயத்திற்கு, 114 பேர் பலியாகி இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு முன், 2023ல், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 22 பேர் பலியாகினர். அதே ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து, 8 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில், 2012 - 2019 வரை, கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் கூட பலியாகவில்லை என, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், 2020 - 2024 ஆண்டு வரை, கள்ளச்சாராயத்திற்கு, 114 பலியாகி இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
![]() |