ADDED : ஜன 08, 2024 07:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி, இன்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். அதிகபட்சமாக சென்னையில் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
கோவையை பொறுத்தவரை, 2 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. ஒருவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கோவையில் 18 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.