தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு இன்று முதல் 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு இன்று முதல் 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கம்
UPDATED : நவ 02, 2024 06:38 AM
ADDED : நவ 02, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் அறிக்கை:
தீபாவளி முடிந்து, பிற ஊர்களில் இருந்து, சென்னை வரும் பயணியர் வசதிக்காக, இன்று முதல் 4ம் தேதி வரை, தினமும் செல்லும் 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்கள், பிற முக்கிய ஊர்களில் இருந்து, 3,405 பஸ்கள் என, மொத்தம் 12,846 பஸ்கள் இயக்கப்படும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற்கனவே அறிவித்தபடி 28 முதல் 30ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2,092 பஸ்களுடன், 4,508 சிறப்பு பஸ்கள் என, மொத்தம் 10,784 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு, அரசு பஸ்களில், 5.66 லட்சம் பேர், சென்னையில் இருந்து சென்றுள்ளனர்.