தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/12ம் நுாற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

12ம் நுாற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

12ம் நுாற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

1


UPDATED : அக் 30, 2026 11:56 PM

ADDED : அக் 30, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 11:56 PM ADDED : அக் 30, 2026 11:54 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால நடராஜர், சிவகாமி அம்மன் வெண்கல சிலைகள் பீடங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வுப் பணிகள் நாகப்பட்டினத்தில் நடந்து வருகின்றன. இதுவரை ஆறு அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ‘ஏ2’ மற்றும் ‘எக்ஸ்.ஏ.,1’ ஆகிய குழிகளில், ஒரு மீட்டர் ஆழத்தில் இரண்டு வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதில், கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை, 110 செ.மீ., உயரமும், 100 செ.மீ., அகலமும் கொண்டது. ஆனந்த தாண்டவக் கோலத்தில் அமைந்துள்ள இச்சிலைக்கு நான்கு கரங்கள் உள்ளன.

மற்றொரு சிலையான சிவகாமி அம்மன் சிலை 82 செ.மீ., உயரமும், 23 செ.மீ., அகலமும் கொண்டது. திரிபங்க நிலையில் அமைந்துள்ள இச்சிலை, இரு கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு சிலைகளின் உடல் அமைப்பு, அசைவுகளின் நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில், அவை கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிற்பக்கலைப் படைப்புகள் என, தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். தொல்லியல் துறையின் அகழாய்வின்போது வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us