UPDATED : ஜூன் 11, 2025 04:54 AM
ADDED : ஜூன் 11, 2025 04:53 AM

சென்னை: சென்னை, வேளச்சேரி, 4வது பிரதான சாலையில், மஹா பெரியவா அனுஷ பூஜா சமதியின், மஹா பெரியவா இல்லம் அமைந்துள்ளது.
அதன் சார்பில், வேளச்சேரி, கணபதி சச்சிதானந்தா நகரில் உள்ள சச்சிதானந்தா ஆசிரமத்தில் காஞ்சி மடாதிபதியாக இருந்த சந்திரசேகரேந்திர சுவாமிகளின், 132வது ஜெயந்தி மகோத்சவம் நேற்று துவங்கியது.
கணபதி சச்சிதானந்த சுவாமிகள் ஆருளாசியுடனும், உலக நன்மைக்காக நேற்று காலை 6:00 மணி முதல் ருத்ராபிஷகேம், ருத்ர ஹோமம், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஜயந்தி மகா சங்கல்பம், மஹான்யாசம் ஆகியவை நடந்தன.
தொடர்ந்து சாம்ப பரமேஸ்வரர், மகா பெரியாளுக்கு, நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.
![]() |
பின், தம்பதி பூஜை, கன்யாபூஜை, வடுபூஜை, சப்த மாதா பூஜைகள் நடந்தன. மாலை லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை, பாராயணம், நாமசங்கீர்த்தனம் நடந்தது.
மகோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை முதல் நாமசங்கீர்த்தன, 108 பாகவதர்களுக்கு பூஜை, மஹா பெரியவருக்கு ருத்ராபிஷேகம், பாகவதர்கள் செய்யும் லட்சார்ச்சனை, 108 நாம சங்கீர்த்தன பாகவதர்களுக்கு சோடச உபசார பூஜை ஆகியவை நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை மஹா பெரியவா அனுஷ பூஜா சமிதியினர் செய்துள்ளனர்.