ADDED : பிப் 03, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; நாட்டில் விற்பனையாகும் மருந்து, மாத்திரைகள் தரமானவையா என்பது குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர் ஆய்வுகளை செய்கிறது. தவிர, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த டிசம்பரில் 1,000க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில், கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளி தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 135 மருந்துகள் தரமற்றவை என, கண்டறியப்பட்டுஉள்ளது. அந்த மருந்துகள் குறித்த விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் https://cdsco.gov.in/ என்ற இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.