சரித்திரத்தை மாற்றி எழுதும் கமிட்டியில் 14 பேர் பிராமணர்கள்: துரைமுருகன் ஆவேசம்
சரித்திரத்தை மாற்றி எழுதும் கமிட்டியில் 14 பேர் பிராமணர்கள்: துரைமுருகன் ஆவேசம்
ADDED : செப் 18, 2024 04:21 AM

சென்னை: சென்னை: தி.மு.க., முப்பெரும் விழா, நேற்று சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நம் பகை இன்னும் விட்டுவிடவில்லை. அன்று ராஜாஜி, ஹிந்தியை திணித்தார். தற்போது மீண்டும் இரு மொழிக் கொள்கையை எடுத்து விடுங்கள் என்கின்றனர்.
அதே போராட்டத்தை மீண்டும் எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். அதே ஜாதிதான், மறைமுகமாக பல காரியங்களை செய்கிறது. சமீபத்தில் டில்லி அரசு, இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக, ஒரு கமிட்டி அமைத்துள்ளது.
தற்போதுள்ள சரித்திரத்தில் என்ன கேடு? ஹரப்பா மொஹஞ்சதாரோ திராவிட நாகரிகம் என்றோம்; அது ஆரியர்கள் நாகரிகம் என, கமிட்டி கூறுகிறது. அதாவது, சரஸ்வதி நாகரிகம் என்கிறது. கமிட்டியில் 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் அரசு அதிகாரிகள்; மீதி 14 பேரும் பிராமணர்கள். எனவே, மறுபடியும் பழைய பல்லவியை பாட வேண்டிய நிலை. இதே நிலை தொடர்ந்தால், தி.மு.க., தன் வீரியத்தைக் காட்டும் நிலை வரும். இவ்வாறு அவர் பேசினார்.

