தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இடி, மின்னல் தாக்கி 14 பேர் பலி

இடி, மின்னல் தாக்கி 14 பேர் பலி

இடி, மின்னல் தாக்கி 14 பேர் பலி


ADDED : அக் 26, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (அக்.,26) அளித்த பேட்டி:

நீலகிரியில் நிலச்சரிவில் சிக்கி பலியான அரசு பேருந்து டிரைவர் குடும்பத்திற்கு, 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. பருவ மழையால் 35 பேர் இறந்திருப்பதாக, ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. அப்படிப்பட்ட நிகழ்வு, ஒரே நாளில் எங்கும் நடக்கவில்லை. பருவ மழை தொடங்கிய நாள் முதல், தமிழகம் முழுதும் இடி, மின்னல் தாக்கி, 14 பேர் உயிரிழந்துள்ளனர்; மீதமுள்ளவர்கள் இயற்கை சீற்றத்தால் மரணம் அடைந்தனரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

கோவையில் மிக கன மழையால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு, அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. கன மழையால் நாகை மாவட்டத்தில், 3,500 ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மழை பெய்து முடிந்த பின்னரே, பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு மலைப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணியர் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே, அங்கிருந்த சுற்றுலா பயணியர் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us