ADDED : டிச 02, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 15ல் துவங்கியது. கடந்த மாதம், 1ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை, மழைக்கு ஏழு பெண்கள் உட்பட 14 பேர் இறந்துள்ளனர். இவர்களில், 10 பேர் மின்னல் தாக்கி இறந்துஉள்ளனர்.
அத்துடன் மழைக்கு 1,878 கால்நடைகளும் பலியாகி உள்ளன; 81 குடிசைகள் முழுமையாகவும், 2,072 பகுதியாகவும், கான்கிரீட் வீடுகளில் எட்டு முழுமையாகவும், 663 பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன என, வருவாய் துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.