கூட்டுறவு சார் - பதிவாளராக 14 பேருக்கு பதவி உயர்வு
கூட்டுறவு சார் - பதிவாளராக 14 பேருக்கு பதவி உயர்வு
ADDED : ஏப் 05, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக கூட்டுறவு துறையில், முதுநிலை ஆய்வாளர், 179 பேர், கூட்டுறவு சார் - பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சுப்பையன் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, 14 பேரில் சசிராம், சவுமியா, ராதிகா, மாரியம்மாள், ஜான்சிராணி ஆகியோர், கூட்டுறவு சார் - பதிவாளராக பதவி உயர்வு பெற்று திருவள்ளூருக்கு இடமாற்றப்பட்டு உள்ளனர்.
அதேபோல, பிரியா நீலகிரி; சவுண்டப்பன், பசுபதி, அருண்மொழி ஆகியோர் செங்கல்பட்டு; ராஜேஸ்வரி, செல்வபிரியா, சத்யபிரபா, பிரியதர்ஷினி, அம்சவள்ளி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
- நமது நிருபர் -