தீபாவளிக்கு 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள்: அறிவித்தது தமிழக அரசு
தீபாவளிக்கு 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள்: அறிவித்தது தமிழக அரசு
UPDATED : அக் 26, 2024 04:50 PM
ADDED : அக் 26, 2024 04:43 PM

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுதும் அக்.,31 அன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக புதிய ஆடைகள், அலங்கார பொருட்கள், பட்டாசுகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், வெளியூர்களில் வசிக்கும் மக்கள், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்களை இயக்கும் தமிழக அரசு, இந்த ஆண்டும் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தாண்டு 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அக்.,28,29 30 ஆகிய தேதிகளில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.