உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 05, 2026 05:09 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வேன் கவிழ்ந்து, ராணி, 60, என்பவர், உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டியிலிருந்து புதுச்சேரியில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க, 18 பேர் வேன் மூலம் வந்தனர். வேனை ஈச்சம்பட்டியை சேர்ந்த கோகுல், 24, ஓட்டி வந்தார்.
நேற்று மாலை 4:00 மணியளவில், கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது, டயர் வெடித்து, வேன் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், ராணி, என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோகுல், பாப்பா, 55, உட்பட, 15 பேர் காயமடைந்தனர்.
அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
