உள்ளடக்கத்திற்கு செல்ல
ம.தி.மு.க.,வினர் 150 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ம.தி.மு.க.,வினர் 150 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூன் 29, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
ம.தி.மு.க., முன்னாள் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் உட்பட 150க்கும் அதிகமானோர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தனர்.
தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.
ம.தி.மு.க.,வின் முன்னாள் சிவகங்கை மாவட்ட செயலர் 'பொடா' செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலர் செங்குட்டுவன், கொள்கை பரப்பு செயலர் பொடா அழகுசுந்தரம், விருதுநகர் மாவட்ட செயலர் சேகர், மாநில தேர்தல் பணி துணை செயலர் விடுதலை வேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட, அக்கட்சி தலைமையால் நீக்கப்பட்டவர்கள், அதிருப்தியில் வெளியேறியவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.
