தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 1,500 பஸ்கள் நாளை இயக்கம்

1,500 பஸ்கள் நாளை இயக்கம்

1,500 பஸ்கள் நாளை இயக்கம்


ADDED : அக் 11, 2024 09:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 09:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'சொந்த ஊருக்கு சென்றவர்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக, 1,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் நாளை இயக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

ஆயுத பூஜை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள், தங்களது பணியிடத்துக்கு திரும்ப வசதியாக, நாளை முதல் பயணியரின் தேவைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருப்பூருக்கு, 1,500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us