உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 11:52 PM
அ நிறம் | அளவு
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களில், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய 16 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய துாதரக அதிகாரி களால், அவசரகால சான்றிதழ் வழங்கப்பட்டு, கொழும்பில் இருந்து விமானம் வாயிலாக நேற்று சென்னை வந்தனர். அவர்களை, மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
