ADDED : டிச 12, 2025 07:47 AM

பொள்ளாச்சி: தமிழகத்தில், 17 கிராம ஊராட்சிகள், 37 கிராம ஊராட்சிகளாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக, மாநில அளவிலான உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பல்வேறு விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களிடம் கருத்துருக்கள் பெறப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு, ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், சிவகங்கை, திருச்சி ஆகிய எட்டு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள் தொகை, பரப்பளவு உள்ளிட்டவை அடிப்படையில், 17 கிராம ஊராட்சிகள், 37 கிராம ஊராட்சிகளாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
* செங்கல்பட்டு மாவட்டத்தில், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில், சூணாம்பேடு ஊராட்சி 22 குக்கிராமங்களை உள்ளடக்கியது. தற்போது, சூணாம்பேடு -11, இல்லீடு - 11 குக்கிராமங்களை கொண்டதாக பிரிக்கப்பட்டது.
* கோவை மாவட்டத்தில், ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதுார் ஊராட்சியில், 9குக்கிராமங்கள் உள்ளன. திவான்சாபுதுார் - 5, கணபதிபாளையம் - 4 குக்கிராமங்களைகொண்டதாகவும்; அன்னுார் ஊராட்சி ஒன்றியம் மசக்கவுண்டன் செட்டிபாளையம் கிராம ஊராட்சியில் 7குக்கிராமங்கள் உள்ளன. அதில், மசக்கவுண்டன் செட்டிபாளையம் - 4; ஒரைக்கால்பாளையம் - 3 குக்கிராமங்களுடன் பிரிக்கப்பட்டன.
மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மயிலேறிபாளையம் ஊராட்சியில் மூன்று குக்கிராமங்கள் உள்ளன. இதை மயிலேயறிபாளையம் - 1, ஏழுர் - 2 குக்கிராமமும் கொண்டதாக பிரிக்கப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், பிளிச்சி ஊராட்சி ஒன்பது குக்கிராமங்களை கொண்டது. தற்போது, பிளிச்சி - 4, ஒன்னிபாளையம் - 5 குக்கிராமங்களை கொண்டதாகவும்; ஐந்து குக்கிராமங்களை உள்ளடக்கிய பன்னிமடை ஊராட்சியில், பன்னீர் மடை - 3, கணுவாய் - 2குக்கிராமங்கள் கொண்டதாக பிரிக்கப்பட்டது.சூலுார் ஊராட்சி ஒன்றியம் முத்துக்கவுண்டனுார் ஊராட்சி, ஐந்து குக்கிராமங்களை உள்ளடக்கியது. அதில், முதலிபாளையம் - 2 , முத்துக்கவுண்டன்புதுார் - 3 குக்கிராமங்களை கொண்டதாக பிரிக்கப்பட்டது.
* தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் மானியதஹள்ளி கிராம ஊராட்சி, 18 குக்கிராமங்களை உள்ளடக்கியது. மானியதஹள்ளி (ஜருகு) - 10 , கீழ்ஈசல்பட்டி - 8 குக்கிராமங்கள் என இரு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டது.
* திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், சித்தரேவு கிராம ஊராட்சி, 16 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இதில், சித்தரேவு - 7, சிங்கார கோட்டை - 9 குக்கிராமங்கள் கொண்டதாக பிரிக்கப்பட்டது.
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் ஆர்.கோம்பை கிராம ஊராட்சி, 35 குக்கிராமங்களை உள்ளடக்கியது. அதில், ஆர்.கோம்பை - 18; சின்னழகு நாயக்கனுார் - 17 குக்கிராமங்கள் என பிரிக்கப்பட்டது.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருநாவலுார் ஊராட்சி ஒன்றியம் சேந்தமங்கலம் கிராம ஊராட்சி, 16 குக்கிராமங்களை உள்ளடக்கியது. அதில், சேந்தமங்கம் - 3, மைலங்குப்பம் - 4, பெரியமாரனோடை - 3, பெரிய குப்பம் - 4, சின்னகுப்பம் (பாதுார் ஊராட்சி) - 2குக்கிராமங்கள் என, ஐந்து ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டது.
* கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடவூர் கிராம ஊராட்சி, 34 குக்கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இது, இடையப்பட்டி கிழக்கு - 23, கடவூர் மேற்கு - 11 குக்கிராமங்கள், என இரண்டாக பிரிக்கப்பட்டது.
* சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி, நான்கு குக்கிராமங்களை உள்ளடக்கியது. கல்லல் வடக்கு - மூன்று, கல்லல் தெற்கு - 1 குக்கிராமங்களுடன் இரு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டது.
* திருச்சி மாவட்டம், ம ணப்பாறை ஊராட்சி ஒன்றியம் புத்தாநந்தம் ஊராட்சி, 21 குக்கிராமங்களை உள்ளடக்கியது. கிராம ஊராட்சியை, புத்தாநத்தம் - 9, இடையப்பட்டி - 12 குக்கிராமங்களுடன் இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது.
கண்ணுடையான்பட்டி கிராம ஊராட்சி, 24 குக்கிராமங்களை கொண்டது. கண்ணுடையான்பட்டி - 12, முத்தபுடையான்பட்டி - 12 என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராம ஊராட்சி, எட்டு குக்கிராமங்களை கொண்டது. கிருஷ்ணசமுத்திரம் - 7, செம்மங்குளம் - 1 குக்கிராமம் என இரு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டது.
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் இனாம் குளத்துார் கிராம ஊராட்சி, 11 குக்கிராமங்களை கொண்டது. ஆலம்பட்டி புதுார் - 9, இனாம்குளத்துார் - 2 குக்கிராமங்கள் கொண்டதாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட் டுள்ளது.

